Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 95 பாடல் வரிகள்
என் மீட்பர் உயிரோ டிருக்கையி லேஎனக் கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே,
1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்,
என்னோ டிருக்கவே எழுந்திருந் தோர்
விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ் சிறந்தோர்;
மித்திரனே, சுகபத்திர மருளும். -என்
2. பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ,
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர்,
சாபமே தீர்த்தோர் சற்குரு நாதன்;
சஞ்சல மினியேன், நெஞ்சமே, மகிழாய். -என்
3. ஆசி செய்திடுவார், அருள்மிக அளிப்பார்,
அம்பரந்தனில் எனக்காய் ஜெபிப்பார்;
மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார்;
மோட்ச வழி, சத்யம், வாசல், உயிரெனும். -என்
4. கவலைகள் தீர்ப்பார்,
கண்ணீர் துடைப்பார், கடைசி மட்டுங் கைவிடா திருப்பார்;
பவமன்னிப் பளிப்பார், பாக்கியங் கொடுப்பார்,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார். -என்
5.போனது போகட்டும் புவிவசை பேசட்டும்,
பொல்லான் அம்புக ளெய்திடட்டும்,
ஆனது ஆகட்டும், அருள்மழை பெய்திடும்
அன்புமிகும்பே ரின்ப மெனக் கருள். -என்