Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 107 பாடல் வரிகள்
1. கதிரவன் எழுகின்ற
காலையில் இறைவனைத் துதி
செய்ய மனமே –நீ எழுந்திராய்.
2. வறண்டு தண்ணீர் அற்ற
வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை- நாடுவேன்.
3. கடவுளின் வல்லமை, கன
மகிமை காணும் இடமதில்
செல்வதே – என் இஷ்டம்.
4. ஜீவனைப் பார்க்கிலும்
தேவனின் காதலை ஆவலாய்
நாடி நான் – போற்றுவேன்.
5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர்
நாமத்தை நேயமாய்
பாடி நான் – உயர்த்துவேன்.
6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை
கொள்கையில் கர்த்தரின்
செயல்களை – சிந்திப்பேன்.
7. அல்லும் பகலும் நான்
அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே – ஒதுங்குவேன்.
8. ஆத்துமம் தேவனை அண்டிக்
கொள்ள அவர் நேத்திரம்போல்
என்னைக் – காக்கிறார்.