Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 89 பாடல் வரிகள்
1. பணியாயோசிரசே, படியோர்’ பவமே சுமந்து
அணியா முண்முடி பூண்ட சிரசினைப் – பணியாயோ
2. நெற்றியே நிமிராய், நீதி ஞாயநடுத்தீர்ப்பில்
வெற்றியுதிரச் சிலுவைக் குறியூணும் – நெற்றியே
3. கேண்மினோ செவிகாள், கிடைக் காதரும் வாசகனார்
சேணும்’ மண்ணும் புகழுரை சொற்றதைக் – கேண்மினோ
4. காணீரோ விழிகாள், கண் ணீரருவிபெருக
தோணெரு சாலம் துயர்கண்டழு தோனைக் – காணீரோ
5. உதடே முத்திசெய்யாய், உனைத்தேடி அலைந்துநொந்து
உதிரஞ் சொரிந்த தூயசெம் பாதத்தை – உதடே
6. துதியாயோ நாவே, தூயதூதர் சேராபீன்கள்
நிதமும் சூழ்ந்தஞ் சலிசெய்யும் நாதனைத் – துதியாயோ
7. கண்டமே நீபாடாய், கதிகண்ட நரர்கணங்கள்
அண்டம் புகழ நவகீதம் பாடுவர் – கண்டமே
8. நெஞ்சே நீயணையாய், நேசசீடனும், பாலகரும்
அஞ்சா துய்ய’ வணைத்திடு மார்பனை – நெஞ்சே
9. சேவிப்பீர் செங்கரங்காள், தீயர் நல்லாரெவரெவர்க்கும்
தாவிப்பணி செய்து யர்த்துங் கரத்தனைச் – சேவிப்பீர்
10. கால்காள் ஓடுங்களே, கானான் தேசத்திசைகளேங்கும்
மேலாம் ஞானம் விதைத்தவர் சேவைக்குக் – கால்கரள்
11. பாதங்களே நடமின் படுபாவி கண்ணீராடிக்
கோதல கைச்சிரம் நைத்த வடிகளில் – பாதங்களே