Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 52 பாடல் வரிகள்
1. உன்னதத் திற் பரற்கு மகிமை
உலகிற் சமாதானம்
இந்நில மானிடர் மேல்
பிரியம் இன்றென்றும் உண்டாக.
2. வான பரன் மகிமை
பாவத்தால் மறைந்ததாயிருக்கப்
பானொலிபோற் சுதனார்
பிறந்தார் பாவஇருள் நீக்க.
3. பாவத்தினால் புவிக்கும்
பாரர்க்கும் பலத்துநின்றயுத்தம்
தாவீதின் சிற்றூரில்
பிறந்தோர் தக அமர்த்தினரே.
4. மானிடனாய்ப் பிறந்த சுதன்
மேல் வைத்திடுங் கண்ணதற்கே
ஈன மானிடர்மேல் பிரியம்
இன்றே உண்டாயினதே.