Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 261 பாடல் வரிகள்
கர்த்தர் உனக்குச் செய்திடும்
கணக்கில்லா நன்மையைப் பார்
அத்தனைக்கும் நீ தகுதியோ
அதனையும் எண்ணியே பார்.
1. நித்தமும் ஏன் கலங்குகின்றாய்?
நெஞ்சமே ஏன் அழுகின்றாய்?
எத்தனை பாரம் என்கின்றாயோ (2)
எறிந்திடு என் மீது என்கின்றாரே – கர்த்தர்
2. எத்தனை நாள் காத்திருப்பேன்
என்று சோர்வடையாதே
ஏற்ற ஓர் நாளிலே உதவி செய்வார்
ஏமாற்றுவார் என்று எண்ணிடாதே
3. உபத்திரவமோ, வியாகுலமோ
உன்னை நெருக்கிட்டாலும்
ஊக்கமாய் ஜெபித்து மகிழ்ந்திடு
உன்னைக் கைவிடார் எந்நாளுமே.