Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 199 பாடல் வரிகள்
இயேசுளின் ஒதுக்கில் நான் இறக்க அருள்புரியும்
நேசபரனே இந்த நீசன் கெஞ்சிக் கேட்சிறேன் – இயேசுவின்
1. நாள் ஓடும், சாவு சேரும்; நாதா, எந்த நேரமோ? பாழுடல் விட்டு ஜீவன்
பறக்கும் வேளையறியேன் -இயேசுவின்
2. இயேசுவை விட்டென் சாவு
என்னைப் பிரித்திடாது
நீசன் அவரில் நின்றென்
நேசரே யென்று சொல்வேன் -இயேசுவின்
3. என் ஜீவன் இன்றுபோயும்
என் மீட்பரால் நான் பாக்யன்
என்சாவு நாளைவந்தும்
இயேசுவுக்குள் நான் நிற்பேன் -இயேசுவின்
4. நீர் என்னை இங்கே வைக்கும்
நேரமட்டும் உமக்கே
சீராக நான் பிழைக்க,
தேவா, எனை நடத்தும் -இயேசுவின்
5. சிர்ப்படத் தாமதமேன்?
ஜீவவழி பிடிப்பேன்
ஈறந்தத்தை’ நினைப்பேன்,
என் தீபமே சோடிப்பேன் -இயேசுவின்
6. இயேசுவின் நீதியால்நான்
என்பாவத்தை மூடுவேன்;
மாசற்றுச் சுத்தமாவேன்
மனத்தில் விசுவாசித்து -இயேசுவின்
7. ஆண்டவ ரைங்காயங்கள்
அடியேனின் அடைக்கலம்
மாண்டோர் அவர், நான் மாளேன்;
மரணம் எனது பாக்யம் -இயேசுவின்