Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 110 பாடல் வரிகள்
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா,
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்
அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை
வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு — இன்றை
1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய் – பலவிதமாம்
பொல்லா மோசங்களில் தற்காத்தாய்;
ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி,
ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய் — இன்றை
2. கையிட்டுக் கொள்ளும்,
என்றன் வேலை – யாவிலுமுன்றன்
கடைக்கண் ணோக்கி, அவற்றின் மேலே,
ஐயா, நின் ஆசீர்வாதம் அருளி, என் மனோவாக்கு
மெய்யால் நின் மகிமையே விளங்கும்படி ஒழுக — இன்றை
3. எத்தனையோ விபத்தோர் நாளே – தஞ்சம் நீ என
எளியேன் அடைந்தேன் உன்றன் தாளே;
பத்தர் பாலனா , எனைப் பண்பாய் ஒப்புவித்தேன், உன்
சித்தம் எனது பாக்கியம், தேவ திருக்குமாரா — இன்றை
4. பாவ சோதனைகளை வென்று , பேயுலகுடல்
பண்ணும் போர்களுக் கெதிர் நின்று,
ஜீவ பாதையில் இன்றும்
திடனாய் முன்னிட்டுச் செல்ல,
தேவ சர்வாயுதத்தைச் சிறக்க எனக் களித்து — இன்றை