Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 225 பாடல் வரிகள்
1. ஜெய ராஜ கொடி ஏற்றிக்
காட்டியே பூரிப்போடு பாடுவோம்
நித்திய ஜீவனை
நிதமும் பெற்றிட துதி
செய்யக் கூடுவோம்.
செல்வோம், வெல்வோம்,
நம் மீட்பர்
இயேசு மூலமாய்
வெற்றி சிறப்பார்,
ஆளுவார், பூமி
எங்கும் ஜோதியாய்.
2. இயேசுகிறிஸ்தின் அன்பால்
பயம் நீங்கிடும் சுவிசேஷம்
பரிசுத்த ஆவியால்
நிறைந்து நாம்
வெற்றி வேந்தராகுவோம்-செல்வோம்
3. எந்தத் தேச ஜாதி
பாஷைக்காரரும்
ஜெயக்கொடி ஏற்றுவோம்
இயேசுவின் பின்சென்று
சாட்சி கூறுவோம்
சத்தியத்தைச் சாற்றுவோம் -செல்வோம்
4. அன்பினாலேயே ஒருவருக்
கொருவர் ஊழியமே செய்குவோம்
அவர் அன்பின் கட்டளையின்படியே
நாமும் ஊழியம்
செய்குவோம் -செல்வோம்