Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 134 பாடல் வரிகள்
1. இஸ்ரவேலின் சேனைகட்கு முன்நடந்த தெய்வமே
எங்களோடு வந்து நீர்முன் நடந்திட வேணுமே.
2. சாலமோன் தேவாலயத்தில் வேகமாக வந்தவா
தாசன்மோசே கூடநின்று தசமுறை’ பகர்ந்தவா,
3. ஸ்நானகன் யோவானாலேசு ஸ்நானமான நேரத்தில்
வந்தமர்ந்த வான்புறாவே வாரும் எங்கள் உள்ளத்தில்.
4. அந்தநூற்றி ருபதுபேர் சென்றதோர்மேல் வீட்டினில்
வந்தமர்ந்த வான்புறாவே வாருமெங்கள் உள்ளத்தில்.