Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 83 பாடல் வரிகள்
1. என்னுடன் பரதீசில் இருப்பாய்
இன்று என்றீர்,- இயேசு நாதா!
ஏழைப்பாவிக்கும் அந்த
நல்வாக்கு அருளுமேன்- இயேசு நாதா!
உம்முடன் நானுமிருக்க
ஆசிக்கிறேன். – இயேசு நாதா!
உம்முட ராச்சியம் என்னையும்
கொண்டுபோம், – இயேசு நாதா!
2. கள்ளன் உன் ராச்சியஞ்
சேர மன்றாடினான் – இயேசு நாதா!
இந்தக் கள்ளனும் அவ்விதம்
மன்றாடி நிற்கிறேன் – இயேசு நாதர
கள்ளன் உன் பக்கத்தில்
கூடப்பாடு பட்டான், – இயேசு நாதா!
இந்தக் கள்ளனும் லோகத்தில்
கஸ்தி பொறுக்கச்செய், – இயேசு நாதா!
3. கள்ளனுக் கருகினில் உன்
சிலுவை நாட்டி, – இயேசு நாதா!
கள்ளனை உம்மிடம் சேர்த்துக்
கொண்டது போல்- இயேசு நாதா!
கள்ளன் என் நெஞ்சிலும்
உன் சிலுவைநாட்டி, – இயேசு நாதா!
கள்ளனையே பரிசுத்தனும்
ஆக்குவீர், – இயேசு நாதா!