Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 68 பாடல் வரிகள்
சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா
தாவீதின்
மைந்தா ஓசன்னா! சரணபதந்தா
1.தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமே
சென்று பல பாடுபடவும் தயவானார் -சரணம்
2.தந்து செய்து பொந்தியுப் பிலாத்து துரைதான்
தற்பரனை
விட்டுவிடத் தன்னுள் எண்ணினான் -சரணம்
3.பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்தி
பாதகனை யோ? இறையை யோ? விட என்றான் -சரணம்,
4.ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்று
திருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார் -சரணம்
5.தண்ணீர் தனை எடுத்துக் கை கழுவியே
தற்பரனைக் கொல்வதற்கங் கொப்புக் கொடுத்தான் -சரணம்
6.கள்ளனையே விட்டு விட்டு யூதர்கட்காக
காவலனைக் குருசறைப் பாவியும் தீர்த்தான் -சரணம்