Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 49 பாடல் வரிகள்
1. மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார், வந்தார். – பாவி
2. இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே
ஏகபராபரன் வந்தார், வந்தார். – பாவி
3. வானவர் பணியும் சேனையின் கர்த்தர்,
மகிமைப் பராபரன் வந்தார், வந்தார். – பாவி
4. நித்யபிதாவின் நேயக்குமாரன்
நேமி’ அனைத்தும் வாழ வந்தார், வந்தார். – பாவி
5. மெய்யான தேவன், மெய்யான மனுடன்,
மேசியா, இயேசையா வந்தார், வந்தார்.- பாவி
6. தீவினை நாசர், பாவிகள் நேசர்,
தேவ கிறிஸ்தையா வந்தார், வந்தார். – பாவி
7. ஜெய அனுகூலர், திவ்வியபாலர்,
திரு மனுவேலனே வந்தார், வந்தார். பாவி