Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 249 பாடல் வரிகள்
எங்கே தேடுவேன் நான்
எங்கே தேடுவேன்
என்நேசர் இயேசுவை
நான் எங்கே தேடுவன்
1. உன்னத ராஜனே ஆ என்
உத்தம நேசரே
உன்னத அன்பாலே ஆ
என் உள்ளம் உருகுதே
2. மலையின் நடுவிலோ நேசரை
மல்லிகை வனத்திலோ
மாடி மேடையிலோ இல்லையேல்
மன்னர் மத்தியிலோ
3. அழகாய் மான்போல நேசர்
அசைந்து வாராரோ
அரச குமாரருள் ஆ என்
அன்பர் ஒருவரே
4. காட்டு மரங்களுள் நேசர்
கிச்சிலி மரம் போலாம்
கமழும் மலர்களுள் நேசர்
இன்ப லீலியாம்
5. அழகு வாய்ந்தவர் நேசர்
அன்பு மிகுந்தவர்
அறிவு மிகுந்தவர்
நேசர் அனைத்தும் அறிபவர்
6. காலை தேடுவேன் நேசரை
கண்டு மகிழுவேன்
கருத்தாய் பாடுவேன்
இயேசுவின் காலை நாடுவேன்