Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 233 பாடல் வரிகள்
1. துதிக்கிறோம் உம்மை வல்லபிதாவே
துத்தியம் செய்வோம் உமை மா அரசே
தோத்ரம் உம் மாட்சிமைக்கே பரனே
துந்துமி மாட்சிமைக்கே பிதாவே
2. சுதனே யிரங்கும் புவியோர் கடனைச்
சுமந்ததைத் தீர்த்த தூயசெம்மறியே
சுத்தா ஜெபங்கேளும் பரன்வலத்
தோழா ஜெபங்கேளும் கிறிஸ்தே
3. நித்யபிதாவின் மகிமையில் நீரே
நிமலாவியினோ டாளுகிறீரே
நிதமே அர்ச்சனையே உன்னத
நேயருக் கர்ச்சனையே ஆமேன்