Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 148 பாடல் வரிகள்
தினமே நானுனைத் தேடிப் பணியத் துணைபுரி
வாய்நித்திய ஏக தெய்வமே
மனநிலை தவறி மருகினேன்’ நானே,
மாசிலானே அனுகூல நற்கோனே -தினமே
1. அருள் நாயகனே, அம்பரத் தீசா
ஆதியாய் நின்றபேர் அருள்நிறை பாசா,
மருள்பவ நாசா மனுக்குல ராசா
மகிமை யடைந்த மாமகத்துவ நேசா! -தினமே
2. செத்தேன், எனக்குன் ஜீவன் அளித்தாய்,
தீயனென் மேல்திருத் தீர்த்தம் தெளித்தாய்,
முத்தே யென்நன்மைக் காக மரித்தாய்,
மோதிய தீவினை யாவும் அழித்தாய். -தினமே
3. திரளென் பாவங்கள் தீர்த்திட வாராய்,
தீமை மறந்துநான் சீர்பெறக் கூராய்,
கரள் குணமாற்றிக் கனிந்தெனைச் சேராய்,
களிப்புடன் பாடிடக் கருணைக்கண்பாராய். -தினமே