Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 130 பாடல் வரிகள்
அனாதி தேவன் உன் அடைக்கலமே,
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே!
இந்த தேவன் என்றென்று முள்ள
சதா காலமும் நமது தேவன்;
மரணபரியந்தம் நம்மை நடத்திடுவார்!
1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்,
தூய தேவ அன்பே
இவ்வனாந்தரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார் -இந்த
2. கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே -இந்த
3. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்- இந்த
4. கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கைதனை
உண்மையாய்க் கர்த்தர் காத்துக்கொள்வார் -இந்த
5. இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
தூய தேவ தயவால்
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினிலே
கிடைக்கும் இளைப்பாறுதலே -இந்த