Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 120 பாடல் வரிகள்
தேவனே, இயேசு நாதனே,
இத் தேவ ஆலயம் வந்திடும்
தேவஆலயம் வந்தவர்க்கருள்
திவ்ய ஆவியை ஈந்திடும்! -தேவனே
1. பாவிகள் உமக் காலயஞ்
செய்யப் பாத்திரர்களோ? அல்லரே;
பாவநாசராம் இயேசுவே, உம்மால்
பாத்ரராய் இதைச் செய்தனர்.-தேவனே
2. கூடிவந்துமையே பணிந்திடக் குறித்த
இச்சிறு ஆலயம் நாடிவந்தவர்
யாவருக்குமுன் நல்வசனமுணவாகவும்.-தேவனே
3. இயேசுவே, உமக்கான ஆலயம்
பாவியின் சிறு நெஞ்சமே
பாவம் யாவையும் நீக்கியே
சிறு தேவ ஆலய மாக்கிடும்! -தேவனே