Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 191 பாடல் வரிகள்
உந்தன் திருப்பணியை உறுதியுடன் புரிய
உதவாத பாவிநானே
அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டு
வந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன்தொண்டு -உந்தன்
1. வேதனத்தின்’ பொருட்டோ, மேலவர் நிமித்தமோ
வெளியிட் டறிக்கை செய்யவோ? – உல
காதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்
அடைந்துப்ர காசிக்கவோ?
ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்
நீதிக்கெனைப் பலியாய்
நேர்ந்துகொண்டுழைக்கேனோ? -உந்தன்
2. வேனல், குளிரைக் கண்டு மேனி மிகவெருண்டு
வெளியேறா தகம் துஞ்சினேன்’; – வேளைப்
பான முணவும் பிந்த பலபிணி வருமென்ற
பயத்தாலே நித மஞ்சினேன்;
கானகம்’ மலைசென்று கடும்பனி குளிர் வென்று
போனகம் நீரகன்று புவியிலுழைத்த இயேசு -உந்தன்
3. காடோ, மலை நதியோ, கடலோ கடந்தலுத்துக்
கஸ்தி மிகவே அடைந்து, – உடல்
பாடுங் கவலை நோயும், பசியும் நிருவாணமும்,
பகைவர் திருடர் மோசமும் சாடக் கிறிஸ்துவுக்குத் தகுந்த பானபலியாய்
ஓடத்தனை யொப்பித்தோன் உறுதி யெனக்கில்லையே -உந்தன்
4.வண்டி குடைகள் ஜோடுவைத்து எனது கூடு
மயங்கி அயர்ந்து வாடுதே, – இனி
என்று மிருப்பிடத்திலிருந்து பணி புரிய
இசைந்தென் மனமே நாடுதே;
ஒன்றும் உதவியின்றி ஊரே அலைந்து சென்று
நன்றே நிதம் புரிந்த நரனே, பரனே, இயேசு -உந்தன்