Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 99 பாடல் வரிகள்
ஆவியை மழைபோல ஊற்றும் – பல
சாதிகளை இயேசு மந்தையிற் கூட்டும்
பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே
பரிந்து நீர் பேசியே இறங்கிடச்செய்யும் -ஆவியை
1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ்சென்றீர்
இன்பப் பெருக்கிலே பொங்கிமகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும். -ஆவியை
2. சிதறுண்டலை கின்ற ஆட்டைப் – பின்னும்
தேடிப்பிடித்து நீர் தூக்கிச் சுமந்து
பதறாதே நான்தான் உன் நல்மேய்ப்பன் இயேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். -ஆவியை
3. காத்திருந்த பலபேரும் – மனங்
கடினங்கொள்ளா முன்னே உம்பாதஞ் சேரும்;
தோத்திரக் கீதங்கள் பாடிப்புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். -ஆவியை
4. தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும்
சுவிசேஷ ஜெபத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகவரழும்ப
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்.-ஆவியை
