Site icon Treasure Hymns – Tamil

பாடல் 98 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 98 பாடல் வரிகள்

 

தீய மனதை மாற்ற வாரும்,
தூய ஆவியே – கன நேய ஆவியே

1. மாயபாசத் தழுந்தி வாடி
மாளுஞ் சாவிதால் – மிக மாயும் பாவி நான் – தீய

2. தீமை செய்ய நாடுதென்றன்
திருக்கு நெஞ்சமே – மருள் தீர்க்கும், தஞ்சமே – தீய

3. பரத்தை நோக்க மனம்
அற்றேனே, பதடிதான், ஐயா – ஒரு பாவி நான் ஐயா – தீய

4. புதிய சிந்தை, புதிய ஆசை
புதுப்பித்தாக்கவே – அதைப் புகழ்ந்து காக்கவே – தீய

5. ஏக்கத்தோடென் மீட்பைத்
தேடி இரந்து கெஞ்சவே – தினம் இதயம் அஞ்சவே – தீய

6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு
கீதம் பாடவே – அவர் கிருபை தேடவே – தீய

7. தேவ வசனப் பாலின்மீது தேட்டம்
உன்னவே – மிகு
தெளிவு துன்னவே – தீய

8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப்
போற்றவே – மிக
சிறப்பாய் ஏற்றவே – தீய

Exit mobile version