Site icon Treasure Hymns – Tamil

பாடல் 94 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 94 பாடல் வரிகள்

 

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கைகொட்டிப் பாடிடுவோம்

இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ ஆ கீதம்

1. பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுதுபார் – அங்கு
போட்ட முத்திரை காவல் நிற்குமோ – தேவ
புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ கீதம்

2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் – தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு – ஆ ஆ கீதம்

3. அன்னா காய்பா ஆரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் – இன்னா
பூத கணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார்

4. வாசல் நிலைகளை உயர்த்தி நடங்கள்
வருகிறார் ஜெயவீரர் – நம்
மேள வாத்தியம் கை மணி பூரிகை
எடுத்து முழங்கிடுவோம்

Exit mobile version