Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 92 பாடல் வரிகள்
யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்,
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்!
1. வேதாளக் கணங்கள்’ ஓடிடவே,
ஓடிடவே, உருகி வாடிடவே. -யூத
2. வானத்தின் சேனைகள் துதித்திடவே,
துதித்திடவே, பரனைத் துதித்திடவே. -யூத
3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன,
தெறிபட்டன, நொடியில் முறிபட்டன. -யூத
4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே,
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே -யூத
5. மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்,
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார். -யூத
6. மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை,
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை. -யூத
7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்,
பாதம் பணிவோம் பதத்தைச் சிரமணிவோம். -யூத
