Site icon Treasure Hymns – Tamil

பாடல் 90 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 90 பாடல் வரிகள்

 

ஆமேன், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா!
ஆமேன் அல்லேலூயா! ஜெயம்!
ஜெயம்! ஆனந்த தோத்திரா.
ஓம் அனாதி தந்தார் வந்தார், இறந் துயிர்த்தெழுந்தாரே, உன்னதமே! -ஆமேன்

1. வெற்றி கொண்டார்ப்பரித்து -கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து – முறித்து
பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத்தரித்து, முடித்தார். – ஆமேன்

2. சாவின் கூர் ஒடிந்து – மடிந்து,
தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து,
ஜீவனே விடிந்து – தேவாலயத்
திரை ரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது. -ஆமேன்

3. வேதம் நிறைவேற்றி, – மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி, – பொய் மாற்றி,
பாவிகளைத் தேற்றி, – கொண்டாற்றி,
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார். – ஆமேன்

4. இயேசுபவநாசர் – கிறிஸ்துவே
என்னாத்தும நேசர் – மகாசத்திய
வாசர் கிருபை வாசர் – உலாசர்
மகிமையின் ராசர் சருவேசர். – ஆமேன்

Exit mobile version