Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 88 பாடல் வரிகள்
1. அப்பா பிதாவின் அருமைத் திருக்கரத்தில்
தப்பாமல் ஆவியை நீர் – என்னையா தயாபரரே!
ஒப்பிவித்துச் சென்றீரோ?
செப்பிய வார்த்தை சிரசை நீர் சாய்த்தவுடன்
எப்பாவியும் படிக்க – என்னையா தயாபரரே
இதயத் தெழும்பினதோ?
2. தீர்க்க சமாதானஞ் சிறந்திலங்கும் உன் சாவை
மார்க்க வயிராக்கிகட்கு என்னையா தயாபரரே!
மாதிரியாய் வைத்தீரோ?
பரிசுத்தமாய் நடந்து பரிசுத்த சாவுபெற
பாரிலுள்ளோர் தங்களுக்கு – என்னையா தயாபரரே
படிப்பினையாய்ச் செய்தீரோ?
3. பார்த்து நின்றவர் புலம்பப் பாதாளஞ் சென்றீரோ
காத்து நின்றோர் காண – என்னையா தயாபரரே
காரிருளும் மாறலையோ?
பாவிகளானோர்கள் பரதீசு செல்லும் வழி
தேவனே சென்று – என்னையா தயாபரரே
திறந்து வைக்கப் போனீரோ?
4.மனைவியாஞ் சீயோனின் மணவாளன் போறீரோ?
தனியே யிருந்து நான் என்னையா தயாபரரே
தவித்துப் புலம்புதற்கோ?
என்னை யன்பாய் நேசித்து என்னுயிரைக் காப்பதற்குத்
தன்னுயிரை யொப்புவித்த – என்னையா தயாபரரே
தயவை மறப்பேனோ?
