Site icon Treasure Hymns – Tamil

பாடல் 85 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 85 பாடல் வரிகள்

 

1. என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
என்று கதறும் வார்த்தை என்னையா தயாபரரே
என் செவியிற் கேட்கலையோ?

2. சாவின் இருள் மூடச் சாத்தானும் போராட
நோவினால் ஏங்கி என்னையா தயாபரரே
நொந்து கூப்பிட்டீரோ?

3. தேவ சந்நிதி மறைய ஜெகத்தில் இருள் நிறைய
தேவ சுதனே நீர் என்னையா தயாபரரே
செய்த முறைப் பாடிதுவோ?

4. வானத்தையும் பூமியையும் வன்கரத்தில் தாங்குகின்ற
மட்டில்லா வல்லபத்தை, என்னையா தயாபரரே
என் மாபாவ மாற்றினதோ?

Exit mobile version