Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 81 பாடல் வரிகள்
1. பூங்காவில் நீர்மனக் கஸ்தியடைந்ததால்
பூங்காவில் நின்வேர்வை ரத்தமாய்ப் போனதால்
பூங்காவில் மும்முறை கும்புற வீழ்ந்ததால்
பூங்காவில் ஓர் தூதன், தேறுதல் செய்ததால்
பூலோகங்காருமையா, சுவாமி எந்தன்
பாவங்கள் தீருமையா.
2. பாரச்சிலுவையைத் தோள்மேற் சுமந்ததால்
பாரத்தாலே தள்ளம் பாரி நடந்ததால்
பாதகச் சேவகர் ஆடை யுரிந்ததால்
பாவிகள் அவ்வேளை நிஷ்டூரஞ் செத்தால்
பாவியைக் காருமையா, சுவாமி எந்தன்
பாவங்கள் தீருமையா.
3. கனத்த ஆணியால் கைகளை யடித்ததால்
தனத்த ஆணியைக் கால்களில் அறைந்ததால்
கனத்த தேகத்தால் காயங்கள் பிய்ந்ததால்
கனத்த வேள்ரத்தம்’ ஈட்டியால் பாய்ந்ததால்
கன்னெஞ்சம் மாற்றுமையா, சுவாமி அடியேன்
துன்பங்கள் தீருமையா.
சருவேஸ்வரா சுவாமி, இரக்கமாக எங்களைப்பாரும்,
கிறிஸ்தேசுவே சுவாமி, கிருபையாக எங்களைப் பாரும்,
சுத்தாவியே சுவாமி, பட்சமாக எங்களைப்பாரும்.
