Site icon Treasure Hymns – Tamil

பாடல் 79 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 79 பாடல் வரிகள்

 

1. என் மீட்பர் சென்ற பாதையில் செல்ல ஆயத்தமா?
கொல்கதா மலை வாதையின் பங்கைப் பெறுவாயா?
சிலுவையை நான் விடேன் (5) சிலுவையை, சிலுவையை, நான் விடேன்.

2. ஊரார் இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா?
மூர்க்கர், கோபிகள் நடுவில் திடனாக நிற்பாயா? – சிலுவையை

3. தாகத்தாலும் பசியாலும் தோய்ந்தாலும் நிற்பாயா?
அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா?

4. பாவாத்(கு)மாக்கள் குணப்பட நீ தத்தம் செய்வாயா?
கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா?

5. லோகத்தார் மாண்டுபோகிறார் மெய் வீரர் இல்லாமல்!
பார் பீட்டர் ஜீவனை விட்டார் தொங்கிச் சிலுவையில்!

6. வாழ் நாளெல்லாம் நிலை நின்று சிலுவையைச் சுமப்பேன்;
தேவ அருளினால் வென்று மேல் வீட்டைச் சேருவேன்.

Exit mobile version