Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 77 பாடல் வரிகள்
பாவம் போக்கும் ஜீவநதியைப்
பாராய் வந்து பாராய் – பாரில்
தீவினை தீர்க்கும் தேவமறியின்
திருரத்த மிந்த ஆறாம் – பாவி
1. கல்வாரி மலைச்சிகர மீதூற்றுக்
கண்கள் ஐந்து திறந்தே – அதோ
மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
வழிந்தோடுது பாராய் – பாவி
2. பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
பதறி விழுந் தலறி – நிதம்
கூவியழுத அனந்தம் பேரிதில்
குளித்தே யுளங் களித்தார் – பாவி
3. பத்தருளத்தி லிடைவிடாமல்
பாய்ந்து வளமீந்து – அதை
நித்தமும் பரிசுத்த குணத்தில்
நிலைநாட்டுது பாராய் – பாவி
4. ஒருதர இந்த நதியின் தீர்த்தம்
உண்டோ ஜீவன் கண்டோர் – தாகம்
அறுதி யடைவர் வேறொரு நதிக்(கு)
அகலையார் தேடி யலையார் – பாவி
5. நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
நீரார் நதியிதிலே – தங்கள்
வஸ்திரந் தோய்த்த தூயர் சபையில்
வாழ்ந்துகீதம் பாடாய் – பாவி