Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 69 பாடல் வரிகள்
எங்கே சுமந்து போகிறீர் ?
சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர்?
1. எங்கே சுமந்து போகிறீர்?
இந்தக் கானலில் உம
அங்கம் முழுதும்நோக,
ஐயா, என் ஏசுநாதா
2. தோளில் பாரம் அழுத்த,
தூக்கப்பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே,
தாபசோபம் உற நீர்
3. வாதையினால் உடலும்
வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச் சீமோனும்
பின்னாகத் தாங்கிவர
4. தாயார் அழுதுவர,
சார்ந்தவர் பின்தொடர
மாயம் இல்லாத
ஞானமாதர் புலம்பிவர
5. வல்ல பேயைக் கொல்லவும்,
மரணந்தனை வெல்லவும்
எல்லை
இல்லாப் பாவங்கள்
எல்லாம் நாசமாகவும்
6. மாசணுகாத சத்திய வாசகனே,
உமது தாசர்களைக் காக்கவும்
தாங்காச் சுமை எடுத்து
7. வண்டக்கள்ளர் நடுவில்
மரத்தில் தொங்குவதற்கோ,
சண்டாளர்களைத் தூக்கும்
தலையோட்டு மேட்டுக்கோ
