Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 67 பாடல் வரிகள்
சரணம், சரணாம், அனந்தா, சச்சிதானந்தா
தாவீதின் பைந்தா, ஓசன்னார் சரணபதந்தா
1. பித்தன் என்று வெள்ளை அரைச்சட்டை அணிந்து
பேதக ஏரோதேபரி காசம்பண்ணினான் – சரணம்
2. கற்றூணில் சேர்த்திறுகக் கட்டி, வலுவாய்
காவலன்’ தன் சேர்வை எல்லாம் கூடி அடித்தார் – சரணம்
3. முள்ளின்முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே,
மூர்க்கமுட னேதடிகொண் டார்க்க அடித்தார் – சரணம்
4. கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு
காவலன் நீ யூதருக்கென் றோவியஞ் சொன்னார் – சரணம்
5. துப்பினர் முகத்தினில்அ திக்கிரமமாய்,
துன்னிய’ கைக்கோலை வாங்கி சென்னியில்போட்டார் -சரணம்
6. முழங்காலிலே இருந்து தெண்டன் பண்ணியே,
முன்னவனைத் தான் இறைஞ்சிக் கன்னத்தறைந்தார் -சரணம்
