Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 61 பாடல் வரிகள்
நன்றி செலுத்துவாயே – என்
மனமே நீ நன்றி செலுத்துவாயே
1. அன்றதம் செய்தபாவம் பொன்று நிமித்தமாக
இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே – நன்றி
2. தேவசேயனும் தன் சேணுல கத்தைவிட்டு
ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே – நன்றி
3. அதிசய மானவர் ஆலோசனைக் கர்த்தர்
துதிபெற பாத்திரராம் சுதனவர்க்கே – நன்றி
4. வல்லமை யுள்ளதேவன் வான நித்தியபிதா
சொல்லரும் பரம்பொருளாம் சுதனவர்க்கே -நன்றி
5. உன்னத தேவனார் தமக்கே மகிமையுடன்
இந்நிலம் சமாதானம் என்றுமுண்டாக – நன்றி.
6. மெய்ச்சமாதானத்தை மெய்ப்பித்த பிரபுவே
பொய்ச்சமாதானத்தைப்புறக்கணித்ததாலே – நன்றி
7. ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்
ஆசீர்வ திப்பதாலே அருமையாக -நன்றி
