Site icon Treasure Hymns – Tamil

பாடல் 50 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 50 பாடல் வரிகள்

 

வரவேணும் எனதரசே,
மனுவேல் இஸ்ரவேல் சிரசே.

அருணோதயம் ஒளிர்
பிரகாசா, அசரீரி ஒரே
சருவேசா – வரவேணும்

1. வேதா, கருணாகரா,
மெய்யான பராபரா
ஆதார நிராதரா
அன்பான சகோதரா,
தாதாவும், தாய்
சகலமும் நீயே நாதா,
உன் தாபரம்
நல்குவாயே. – வரவேணும்

2. படியோர் பவமோசனா,
பரலோக சிம்மாசனா,
முடியா தருள் போசனா,
முதன்மா மறைவாசனா,
இடையர் குடிலிடை
மேவி எழுந்தாய்,
இமையவர் அடிதொழு மேன்மையின்
எந்தாய்- வரவேனும்

3. வானோர் தொழும்
நாதனே, மறையாகம
போதனே, கானாவின்
அதீதமே கலிலேயவி
னோதனே, ஞானாகரமே,
நடுநிலை யோவா,
நண்பா, உனத
நன்மையின் மகாதேவா -வரவேணும்

Exit mobile version