Site icon Treasure Hymns – Tamil

பாடல் 48 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 48 பாடல் வரிகள்

 

இயேசுவின் நாமம்
இனிதான நாமம்
இணையில்லா நாமம்
இன்ப நாமம்

1. பாவத்தைப் போக்கும்
பயமதை நீக்கும்
பரம சந்தோஷம்
பக்தருக்களிக்கும் — இயேசுவின்

2. பரிமள தைலமாம்
இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை
வீசிடும் நாமம் — இயேசுவின்

3. வானிலும் பூவிலும்
மேலான நாமம்
வானாதி வானவர்
இயேசுவின் நாமம் — இயேசுவின்
4. நேற்றும் இன்றும்
என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும்
கைவிடா நாமம் — இயேசுவின்

5. முழங்கால் யாவும்
முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர்
நாமம் — இயேசுவின்

6. சாத்தானின் சேனையை
ஜெயித்திட்ட நாமம் சாபப்
பிசாசை துரத்திட்ட நாமம் — இயேசுவின்

Exit mobile version