Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 47 பாடல் வரிகள்
இன்பமிதே பேரின்பமிதே
இயேசு நாமம் இன்பமிதே
இன்பமிதே நல் இன்பமிதே
இயேசு நாமமே
1. பாவம் போக்க வந்த நாமம்
இயேசு நாமமே
வாதை போக்க வந்த நாமம்
இயேசுவின் நாமமே
2. நேற்றும் இன்றும் மாறா நாமம்
இயேசு நாமமே
தேனிலும் இனிய நாமம்
இயேசுவின் நாமமே
3. ஜீவத் பாதை காட்டும் நாமம்
இயேசு நாமமே
ஜீவன் பெலன் தந்த நாமம்
இயேசுவின் நாமமே
4. சாவு பயம் நீங்கும் நாமம்
இயேசு நாமமே
சாபம் ரோகம் நீங்கும் நாமம்
இயேசுவின் நாமமே
5. தேவராஜ்யம் சேர்க்கும் நாமம்
இயேசு நாமமே
தேவ நீதி நிறைந்த நாமம்
இயேசுவின் நாமமே
