Site icon Treasure Hymns – Tamil

பாடல் 4 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 4 பாடல் வரிகள்

 

1. ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ
வாகு தங்கு குருனாதா நமோ நமோ
ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ
மாகமண்டல விலாசா நமோ நமோ
மேகபந்தியி னுலாசா நமோ நமோ
வான சங்கம் விஸ்வாசா நமோ நமோ
நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ
காகமும் பணிசெய் சீலா நமோ நமோ
நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ
ஏசு மந்த்ரமுறு பூமா நமோ நமோ
யூக தந்த்ரவாதி சீமா நமோ நமோ
ஏசு வென்ற திருநாமா நமோ நமோ

2.அறிவி னுருவாகிய மூலா நமோ நமோ
மறையவர்கள் தேடிய நூலா நமோ நமோ
அதிசய பராபர சீலா நமோ நமோ
பொறிவினை யூறாத சரீரா நமோ நமோ
குறையணுவிலாத குமாரா நமோ நமோ
புவன முழுதாள் அதிகாரா நமோ நமோ
நிறைவழியின்
மேவிய கோனே நமோ நமோ
முறைகள் தவறாத விணோனே நமோ நமோ
நீதிபெருகு மாரச தேனே நமோ நமோ
இறை தவிது பாடிய கீதா நமோ நமோ
பறைகள்பல கூடிய போதா நமோ நமோ
எருசலை யினீடிய நாதா நமோ நமோ

Exit mobile version