Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 36 பாடல் வரிகள்
சுந்தரப்ப ரமதேவ மைந்தன்
இயேசு கிறிஸ்துவுக்குத்
தோத்திரம், புகழ்ச்சி நித்யக்
கீர்த்தனம் என்றும்!
அந்தரம்” புவியும்தந்து,
சொந்தஜீவனையும் ஈந்து
ஆற்றினார், நம்மை ஒன்றாய்க்
கூட்டினார், அருள்முடி
சூட்டினார், கிருபையால்
தேற்றினாரே துதி -சுந்தர
1. பாதகப் பிசாசால்வந்த
தீதெனும் பவத்தால்நொந்த
பாவிகளான நமை
உசாவி* மீட்டாரே,
தேவபிதாவுக்குகந்த
ஜாதியாகக் கூட்ட வந்த
மேசியாவைப் பற்றும்விசு
வாசவீட்டாரே
கோதணுகா” நீதிபரன் பாதமதினாதரவில்
கூடுங்கள், பவத்துயர்
போடுங்கள் ஜெயத்தைக்கொண்
டாடுங்கள், துதிசொல்லிப்பாடுங்கள்,
பாடுங்கள் என்றும்-சுந்தர
2. விண்ணிலுள்ள ஜோதிகளும்,
எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய்க் கிறிஸ்துவைப்ப
ணிந்துபோற்றவே,
மண்ணிலுள்ள ஜாதிகளும்,
நண்ணும்பல பொருள்களும்
வல்லபரன் எனத்துதி
சொல்லி ஏத்தவே
அண்ணலாம் பிதாவுக்கொரே
புண்ணியக் குமாரனைக்
கொண்டாடிட, அவர்பதம்
தேடிட, வெகுதிரள்
கூடிட, துதிபுகழ் பாடிட,
பாடிட என்றும் – சுந்தர
3. சத்தியத்தரசர்களும்,
உத்தியோகத் துரைகளும்,
சங்கத்தோர்களும்
கிருபை தங்கிவாழவே,
எத்திசை மனிதர்களும்,
பக்தர், விசுவாசிகளும்
ஏகமிகும் சமாதானமாக வாழவே
உத்தமப் போதகர்களும்,
சத்யதிருச் சபைகளும்
உயர்ந்து வாழத் தீயோன்
பயந்து தாழ, மிக நயந்து
கிறிஸ்துவுக்கு ஜெயந்தான்,
நயந்தான் என்றும் -சுந்தர