Site icon Treasure Hymns – Tamil

பாடல் 34 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 34 பாடல் வரிகள்

 

இயேசுவைப் போல்நல்ல நேசருண்டோ?
இல்லையே, இல்லையே.
ஆத்தும நோய்தீர்க்கும் வைத்தியருண்டோ?
இல்லையே, இல்லையே.

இயேசு நேச ரறிவாரன்னை,
என்றும் என்னோ டிருப்பாரே – இயேசுவை

1. இயேசையர் மேன்மைக்கோர் நிகருண்டோ?
இல்லையே, இல்லையே.
ராஜனின் தாழ்மைக்கோர் ஒப்புமுண்டோ?
இல்லையே, இல்லையே. – இயேசு நேசர்

2. எப்பொழு தாயினும்கை விடுவாரோ?
இல்லையே, இல்லையே.
காரிரு ளில்அவர் நீங்குவாரோ?
இல்லையே, இல்லையே. -இயேசு நேசர்

3. யாரும் அவரில் ஏ மாந்ததுண்டோ?
இல்லையே, இல்லையே
எப்பாவியும் தள்ளப் பட்டதுண்டோ?
இல்லையே, இல்லையே. – இயேசு நேசர்

4. இயேசுவைப் போல்மீட்ப ரெங்குமில்லை!
இல்லையே, இல்லையே; -இயேசு நேசர்
அன்பரிலன்பர் வேறெவருமில்லை;
இல்லையே, இல்லையே. – இயேசு நேசர்

Exit mobile version