Site icon Treasure Hymns – Tamil

பாடல் 28 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 28 பாடல் வரிகள்

 

இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம், சரணம், சரணம்.
ஆத்ம நாதனின் மலரடிக்கு
சரணம், சரணம், சரணம்.

1. பார் போற்றும் தூய தூய தேவனே,
மெய் ராஜாவே எங்கள் நாதனே,
ஆற்றித் தேற்றித் துணை யாவும் ஆனீரே,
சரணம், சரணம், சரணம். – இயேசு

2. இளைப்பாறுதல் தரும் தேவனே,
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே,
ஏழை என்னை ஆற்றித் தேற்றிக் காத்தீரே
சரணம், சரணம், சரணம். – இயேசு

3. இன்னல் துன்பம் யாவும் போக்க வல்லோரே
பெலன் ஈந்து வலக்கரம் பிடித்தீரே,
ஆவி ஆத்மா சரீரமும் படைத்தீரே
சரணம், சரணம், சரணம். – இயேசு

4.உந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்
சரணம் சரணம், சரணம்.- இயேசு

Exit mobile version