Site icon Treasure Hymns – Tamil

பாடல் 260 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 260 பாடல் வரிகள்

 

1. சென்ற பகலில் எமைக்காத்து
தீமை சதி மோசமும் நீக்கி
அன்றாடக அமுதையும் அருளி
ஆதரவாயெம்மோடிருந்தீர்

2. இன்றொளி ஆசிர் பெறச்செய்தாய்
ஈசாவாசா பசநாசா
நன்றியறிதல் தோத்திரங்கள்
நாதா உமக்கே ஒருகோடி

3. இரவின் மோசம் விக்கினமும்
இருளின் பிரபுவின் தந்திரமும்
அரவு பூச்சிகள் சொப்பனமும்
அணுகாதெமைநின் செட்டைகளின்

4. மறைவாய் வைத்து காப்பாற்றி
மகிமையின் தூதரின் காவல்தந்து
நிறைவாய் மறுகாலையில் எழும்பும்
நிமலா துதியுமக்கொருகோடி

Exit mobile version