Site icon Treasure Hymns – Tamil

பாடல் 259 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 259 பாடல் வரிகள்

 

வாரார் வாரார் பாரினில் இம்மானுவேல் வாரார்
வையகத்தில் உள்ளோரே நீர் வாழ்த்தியே ஜெபிப்பீர்
ஸரிகம பம தமபக மரிரிரி
நிஸரிக மரிபக மரிக எளளல

1. கோபம் சாபம்
வர்மம் நீக்கி
கூட்டி வாழ்விக்க
கோன் தாவீதின் கோத்திர
குமாரனாய் வாரார்

2. ஆறுதல் நமக்களிக்க
அம்பரன் வாரார்
ஆதலத்தில் உள்ளோரே நீர்
ஆவலாய் ஜெபிப்பீர்

3.ஏழையைப் போலவே
வெகு தாழ்மையாகவே
ஏக சக்ர ஆதிபன் திரு
மைந்தனாய் வந்தார்

4. விடியுங்கால நேரமாச்சுது
விடிவெள்ளியும் தோன்றலாச்சு
கொடிய சாத்தான்
முடியை வெல்ல
நடுவில் ஏசு வாராரே.

Exit mobile version