Site icon Treasure Hymns – Tamil

பாடல் 252 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 252 பாடல் வரிகள்

 

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னை தம் கரங்கள் நீட்டி
இயேசு அழைக்கிறார்

1. எத்துன்ப நேரத்திலும்
ஆறுதல் உனக்களிப்பார்
என்றுணர்ந்து நீ இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் -இயேசு

2. சோர்வடையும் நேரத்தில்
ஆறுதல் உனக்களிப்பார்
யாராயிருந்தாலும் பேதங்களின்றியே
கிருபையாய் அன்பை அளித்திடவே -இயேசு

3. சகல வியாதியையும்
குணமாக்க வல்லவராம்
அவர் உன் வெளிச்சம் இரட்சிப்பு மானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய் -இயேசு

Exit mobile version