Site icon Treasure Hymns – Tamil

பாடல் 244 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 244 பாடல் வரிகள்

 

உண்மையாம் உபவாசம் எது?
உண்ணாமல் இருப்பதா அது?

1. உள்ளத்தில் அன்பினையே பேணாமல்
உடல் தன்னை ஒடுக்கினால் போதுமா?
சடங்காக நோன்பினை மேற்கொண்டால்
சிந்தையில் மாற்றமே ஆகுமா?

2. உடையின்றி தவித்திடும் ஒருவனுக்கு
உடையீந்தால் அதுவன்றோ உபவாசம்
தடையின்றி பிறருக்குத் தயைகாட்டி
சடைப்பின்றி உழைப்பதே உபவாசம்

3. துன்பத்தில் இருப்போரின் துயர்நீக்கி
தனிமையில் வாடினால் துணையாகி
எளியோரின் தோழனாய் இணைந்தென்றும்
இருப்பதே உள்ளத்தின் உபவாசம்

Exit mobile version