Site icon Treasure Hymns – Tamil

பாடல் 243 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 243 பாடல் வரிகள்

 

அமைதியில் இறைவனைக்
காணுவோம்
அமர்ந்தே அவர்
அன்பைப் பூணுவோம்

சுமைகளை அவர்
பதம் போடுவோம்
சோர்வுகள் நீங்கியே
வாழுவோம்

1. நம்மாலே எல்லாம்
ஆகும் என்று
நம்பியே வாழ்ந்தது
போதும் என்று
பெம்மானின் பாதமே
பணிந்து நின்று
பேரருள் நாடுாம்
வேண்டி நின்று

2. கடந்ததை கடவுள்
நினைப்பதில்லை
கணக்குகள் பார்த்துமே
கணிப்பதில்லை
நடந்திடும் பாதையில்
கூட வந்து
நம் நலம் நாடுவோர்
ஏங்கி நின்று

Exit mobile version