Site icon Treasure Hymns – Tamil

பாடல் 24 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 24 பாடல் வரிகள்

 

1. சருவ வலிமை கிருபைகள்மிகுந்த
சருவேசா
தரிசனம் தருமுன் சன்னிதி
புகுந்தேன் திருவாசா

2. தூயசிந்தை உண்மையில்
உனையே தொழுதேத்த
தூய ஆவி கொண்டெனை
நிரப்பும் ஜகதீசா

3. இருதயத்தைச் சிதற விடாமல்
ஒரு நேராய்
இசைத்தமைத்துப் பரவச
மாக்கும் நசரேயா

4. அருளின் வாக்கைக் கருத்துடன்
கேட்டு அகத்தேற்று
அறுபது நூறுமுப்பதாய்ப்
பெருக அருளீசா

Exit mobile version