Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 236 பாடல் வரிகள்
அடைக்கலம் ஆண்டவரே – எங்கள்
அடைக்கலம் வேறில்லையே – எம்மை
படைத்துக் காத்து மீட்டுக்
கொண்டவர் பரம பிதா நீரே
1. பரம சுதந்திரமே, எங்கள் பாத்திரத்தின்
பாகமே உன்றன்
கரமே அருளும் வரமே
கர்த்தாநின் கிருபையின்
மாசெல்வமே – அடைக்
2. ஆலோசனைக் கர்த்தரே
எங்கள் ஆவியான
தூயரே -இந்தப்
பூலோகத்தில் போதம் அளித்திடும்
புனித சகாயர் நீரே -அடைக்
3. ஆறுதல் அளிப்பவரே உம்மை
அண்டிப்பிழைப்போர் எமை – சதா
ஆற்றித் தேற்றி மாற்றி
ஆட்கொணடவர்
மாறாத பூரணரே – அடைக்
4. ஆனந்தம் ஆண்டவரே,
அருளானந்தப் பேரின்பமே – சன்னி
தானமதிலே அழகாய் விளங்குமாப்
பூரண ஆனந்தமே -அடைக்
