Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 232 பாடல் வரிகள்
1. கடல் கொந்தளித்துப் பொங்க,
கப்பல் ஆடி செல்கையில்
புயல் காற்று சீறி வீச
பாய் கிழிந்து போகையில்,
இயேசு, எங்களிடம்
வந்து, கப்பலோட்டியாயிரும்;
காற்றமர்த்தி, துணை நின்று,
கரை சேர செய்திடும்.
2. கப்பல் ஏறிப் போவோருக்கும்
கடும் மோசம் வரினும்,
பாறை, மின், முழக்கம், காற்று,
உமக்கெல்லாம் அடங்கும்;
இருளில் நீர் பரஞ்சோதி,
வெயிலில் நீர் நிழலே;
யாத்திரையில் திசை
காட்டி; சாவில் எங்கள் ஜீவனே.
3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில்
தங்கும் இக பர ஸ்தலத்தில்;
இயேசு எங்களிடம் வந்து,
கப்பலோட்டியாயிரும்; காற்றமர்த்தி,
துணை நின்று, கரை
சேர செய்திடும்.
