Site icon Treasure Hymns – Tamil

பாடல் 228 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 228 பாடல் வரிகள்

 

1. நேய மந்திர தாய
கனக நீதி நியாய
நேய தூய
நிகரில்லாத இயேசு
நாதர்க்கு நித்திய மங்களம்.

2. ஆசீர்வாத உச்சித
உச்சித அமிர்த வசன
சுகிர்த சுகிர்த
இயேசு ராஜன்
மணமகற்கு இனிய மங்களம்.

3. எங்கு மிங்கிர்த
துங்க மங்களம்
எந்த நாளும் மங்களம்
சங்கை ராஜ
கிறிஸ்து மகுட
சர்வ மங்களம்

4. தேவாதி தேவாய
திவிய மங்களம்
திரித்துவ நேய
பாவநாச சர்வலோக
பரம மங்களம்.

Exit mobile version