Site icon Treasure Hymns – Tamil

பாடல் 223 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 223 பாடல் வரிகள்

 

எங்கும் புகழ்
இயேசு ராஜனுக்கே
எழில் மாட்சிமை
வளர் வாலிபரே

உங்களை யல்லவோ
உண்மை வேதங்காக்கும்
உயர் வீரவரனப்
பக்தர் ஓதுகிறார்.

1. ஆயிரத் தொருவர்
ஆவீரல் லோ – நீரும்
அதை அறிந்து
துதி செய்குவீர்;
தாயினும் பன்மடங்
கன்புள்ள நம் இயேசு,
சாமிக்கு நெஞ்சத்தைத்
தந்திடுவீர்! – எங்கும்

2. கல்வி கற்றவர்கள்
கல்வி கல்லாதோர்க்கும்
கடன் பட்டவர்
கண் திறக்கவே
பல்வழி அலையும்
பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப
நிதம் பார்த்திடுவோம். -எங்கும்

3. தாழ்மை சற்குணமும்
தயை காருண்யமும்
தழைப்பதல்லோ
தகுந்த கல்வி?
பாழுந்துர்க்குணமும்
பாவச் செய்கையாவும்
பழந்தோடப் பார்ப்பதுங்கள்
பாரமன்றோ?

4. தூய நற் செய்தியைத்
தாங்கி எங்கும் செல்லும்
தூதர் நீங்களே,
தூயன் வீரரே!
கர்த்தரின் பாதத்தில்
காலை மாலை தங்கிக்
கருணை நிறை
வசனம் கற்றிடுவீர். -எங்கும்

Exit mobile version