Site icon Treasure Hymns – Tamil

பாடல் 222 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 222 பாடல் வரிகள்

 

மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி
கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம
பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர்
திருச்சபையே

அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்

1. காடுகளில் பல
நாடுகளில் என்
மக்கள் சிதறுண்டு
மாளுவதேன்?
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார்
என் ஆடுகளை?

2. சொல்லப்பட்டிராத
இடங்கள் உண்டு
எனை அங்கு
செல்ல இங்கு
ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர்
யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர்
கட்டளை கீழ்ப்படிவீர்

3. எனக்காய்ப் பேசிட
நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட
கால்கள் வேண்டும்
என்செய்தி கூறிட
ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம்
கேட்கிறேன் தர வேண்டும்

Exit mobile version