Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 22 பாடல் வரிகள்
வாரும் நாம் எல்லோரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும்
மாசிலா நம் யேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம். ஆ! வாரும்
1. தாரகம் அற்ற ஏழைகள்
தழைக்க நாயனார் – இந்தத்
தாரணி யிலே மனுடவ
தாரம் ஆயினார் — வாரும்
2. மா பதவியை இழந்து
வறியர் ஆன நாம் – அங்கே
மாட்சி உற வேண்டியே
அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும்
3. ஞாலமதில் அவர்க்கிணை
நண்பர் யாருளர் – பாரும்
நம் உயிரை மீட்கவே அவர்
தம் உயிர் விட்டார் — வாரும்
4. மா கொடிய சாவதின்
வலிமை நீக்கியே – இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர்
விண்டலஞ் சென்றார் — வாரும்
5. பாவிகட் காய்ப் பரனிடம்
பரிந்து வேண்டியே – அவர்
பட்சம் வைத் துறும்
தொழும்பரை ரட்சை செய்கிறார் — வாரும்